திங்கள், 17 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 8 அக்டோபர் 2025 (14:08 IST)

பணத்திற்காக ஹிஜாப் அணிந்தாரா தீபிகா படுகோன்.. போலி ஃபெமினிசம் என குற்றச்சாட்டு..!

பணத்திற்காக ஹிஜாப் அணிந்தாரா தீபிகா படுகோன்.. போலி ஃபெமினிசம் என குற்றச்சாட்டு..!
நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இணைந்து நடித்துள்ள அபுதாபி சுற்றுலா விளம்பரம், தீபிகா ஹிஜாப் அணிந்து தோன்றியதால் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
 
ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு செல்லும்போது தீபிகா ஹிஜாப் அணிந்திருந்தது, பெண்களின் சுதந்திரம் குறித்து பேசிய அவரது முந்தைய நிலைப்பாடுகளுக்கு முரணாக இருப்பதாக நெட்டிசன்கள் சாடுகின்றனர். பல பயனர்கள் இது 'போலி ஃபெமினிசம்' என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
 
சமீபத்தில் வெளியாகி பிரபலமாகி வரும்  'My Choice' விளம்பரத்தை குறிப்பிட்டு, "பொட்டு வைக்கலாமா வேண்டாமா என்பது என் தேர்வு என்று பேசியவர், இப்போது பணத்துக்காக முக்காடு அணிந்துள்ளார்" என்று விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சிலர் "பணத்துக்காக ஹிஜாப்" என்றும், "கோயிலில் உடை அணிவதில் சிரமம் காண்பவர்கள், இங்கு சௌகரியம் பார்க்கிறார்கள்" என்றும் கருத்து தெரிவித்தனர்.
 
இந்த விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலான நிலையில், தீபிகா தனது தொழிலுக்காக தனது கொள்கையில் சமரசம் செய்துகொண்டதாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக தாக்கி வருகின்றனர்.
 
இதற்கு தீபிகா என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran