செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (18:34 IST)

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' படம் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. பாலிவுட்டில் வித்யாபாலன் நடித்த சூப்பர் ஹிட் படமான 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் அனைத்தும் முடிந்து திரையிட தயார் நிலையில் உள்ளது இந்த நிலையில் 'காற்றின் மொழி' படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆனால் இதேபோன்று பல திரைப்படங்கள் சென்னை ஐகோர்ட்டில் தடை பெற்றும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அன்றைய தினமே வெளியாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. ஒரு நீதிமன்றம் தடை விதித்தும் எந்தவித அச்சமும் இன்றி புதிய படங்களை திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை கட்டுப்படுத்த திரையுலகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.