1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:12 IST)

விரைவில் நடிகர் சிம்புவுக்கு டும் டும் டும் - டி. ஆர். முடிவு..!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவரும் படம் ஓடுகிறதோ, இல்லையோ ஆனால், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.  தன் சினிமா வாழக்கையில் சிம்பு எப்பேற்பட்ட கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார் இருந்தாலும் இவரின் ரசிகர்கள் வட்டம் இவரை ஒரு போது கைவிட்டது இல்லை.
 
அண்மையில் சிம்பு நடிப்பில்  வெளிவந்த செக்கச்சிவந்த வானம் மெகா ஹிட் ஆகியுள்ளது, சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் மீட் கூட நடத்தினார்கள்.
 
இந்நிலையில் தற்போது,  சிம்புவின் தந்தையும், தமிழ்  சினிமாவில் இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவருமான டி.ராஜேந்திரன் ஒரு பேட்டியில் ‘சிம்பு என்னிடம் பெண் பார்க்க சொல்லிவிட்டார், நீங்களே ஒரு நல்ல பெண்ணை பாருங்கள் என்றார்.
 
அதற்காக நானும் பெண் தேடி வருகின்றேன், இனி கடவுள் தான் அந்த பெண்ணை காட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.