திங்கள், 17 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 8 அக்டோபர் 2025 (17:46 IST)

சிவகார்த்திகேயன் – சிபி சக்ரவர்த்தி படத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேற்றமா? யார் ஹீரோயின்?

சிவகார்த்திகேயன் – சிபி சக்ரவர்த்தி படத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேற்றமா? யார் ஹீரோயின்?
நடிகர் சிவகார்த்திகேயன், 'பராசக்தி' படத்தை தொடர்ந்து, 'டான்' பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த இந்தப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்ரவர்த்தியின் இரண்டாவது கூட்டணியாக இந்த படம் உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரது தேதிகளுக்காகவே படப்பிடிப்பு தள்ளி போனதாகவும் கூறப்பட்டது.
 
ஆனால், ராஷ்மிகாவுக்கு சமீபத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட கால்ஷீட் சிக்கல்கள் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது.
 
அவருக்குப் பதிலாக, தற்போது தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
 
Edited by Siva