செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:03 IST)

சிம்புவின் படத்தை பாதியில் நிறுத்திய தனுஷ்

நடிகர் சிம்புவின் கெட்டவன் படம் பாதியில் நின்றதற்கு முழு காரணமே நடிகர் தனுஷ்  தான் என்று இயக்குனர் GT நந்து பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 
கெட்டவன் படம் நடிக்க ஆரம்பித்து பிறகு அது பாதியில் நின்றுவிட்டது. அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா என ரசிகர்கள் கூட அடிக்கடி கேட்பார்கள்.
 
ஆரம்பத்தில் சிம்புவிடம் இயக்குனர் GT நந்து கதை சொன்னார். பிறகு ஜீவா, பரத் போன்ற முக்கிய நடிகர்களிடம் சொன்னாராம். சிம்பு நடிக்க ஒப்புக்கொள்ளாததால் நடிகர் தனுஷை சந்தித்து  கதை  சொல்ல சென்றுள்ளார், ஆனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
 
பின் சிம்புவே கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங் பணிகள் நடந்தது. அப்போது சிம்புவுக்கு போன் செய்த தனுஷ் "நீ கதை வேண்டாம் என சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல  வருகிறார். இப்படி நன்றி கெட்டு நடப்பவர்களிடம் நீ ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய்?"  என்று  கேட்டாராம் தனுஷ். அதனால் சிம்பு-GT நந்து மேல் வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளார். பிறகு படத்தில்  நடிக்கவே விருப்பம் இல்லாத சிம்பு ஒரு கட்டத்தில் கெட்டவன் படத்தை பாதியிலே நிறுத்திவிட்டார் என இயக்குனர் GT தெரிவித்துள்ளார்.