குட் நியூஸ் ஆன் தி வே… ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் விநியோகஸ்தர் கொடுத்த அப்டேட்!
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. அவர் நடித்த துணிவு திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்தது. இதற்குக் காரணம் வழக்கமான மாஸ் மசாலா படமாக இல்லாமல் அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் அம்சங்கள் இல்லை என்பது ஒரு குறையாக சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் அடுத்து அஜித் நடிப்பில் வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வழக்கமான அஜித் மாஸ் மசாலா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விடாமுயற்சி தந்த ஏமாற்றத்தால் இப்போது அஜித் ரசிகர்களின் நம்பிக்கை முழுக்க முழுக்க குட் பேட் அக்லி திரைப்படத்தின் மேல் உள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் “கொஞ்ச நாள் பொறு தலைவா.. குட் நியூஸ் ஆன் தி வே… இந்த மாத கடைசியில்” என ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். அதனால் இந்த மாத இறுதியில் குட் பேட் அக்லி படம் சம்மந்தமாக ஏதேனும் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.