வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2025 (09:18 IST)

சத்துணவில் காலாவதியான கடலைமிட்டாய்கள்! தடை செய்து அதிரடி உத்தரவு!

Peanut Candy

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருவதை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வகையில் சத்துணவில் முட்டை, பயறு வகைகள் உள்ளிட்டவையும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறாக மாணவர்களின் கால்சியம் சத்திற்காக கர்நாடக சத்துணவில் கடலை மிட்டாய்கள் வழங்கப்பட்டு வந்தன.

 

இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடலை மிட்டாயில் சர்க்கரை மற்றும் நிறைவுறா கொழுப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பல பள்ளிகளில் ஒழுங்காக சேமிக்கப்படாத மற்றும் காலாவதியான கடலை மிட்டாய்கள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

 

அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசு இனி பள்ளி சத்துணவில் கடலை மிட்டாய்கள் வழங்கக் கூடாது என தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது, கடலை மிட்டாய்களுக்கு பதிலாக அவித்த முட்டை மற்றும் வாழைப்பழங்களை வழங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K