இதுதான் உங்கள் தைரியமா? விக்னேஷ் சிவனுக்கு சித்தார்த் நறுக் கேள்வி

vignesh
Last Modified திங்கள், 25 மார்ச் 2019 (11:41 IST)
மீடூ பிரச்சனையின் போது அமைதியாக இருந்துவிட்டு உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பிரச்சனை வரும்போது குரல் கொடுப்பது தைரியம் அல்ல என நடிகர் சித்தார்த் விக்னேஷ் சிவனை வம்பிழுக்கும்படி பேசியுள்ளார்.
 
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன், ராதாரவியை கடுமையாக டிவிட்டரில் விமர்சித்து வசவசவென ஏகப்பட்ட  டுவீட்டுகளை போட்டு தாக்கினார்.
radha
 
இந்நிலையில் நடிகர் சித்தார்த், தனது டிவிட்டர் பக்கத்தில் மீடூ பிரச்சனையின் போது எனது திரைத்துறை நபர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின்னர்தான் எனக்கு புரிந்தது ஒரு முன்னணி பிரபலம் மீது பழிவரும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதுபோல் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது கலங்கம் வரும் போது திடீரென பேசுவது தைரியம் அல்ல என சித்தார்த் விக்னேஷ் சிவனை விமர்சித்து பேசியுள்ளார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள விக்னேஷ் சிவன், மீடூ பற்றி பேசவில்லை என்றால் அதில் நாட்டமில்லை என அர்த்தமில்லை, நயன்தாரா எப்பொழுதும் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். ஒரு பெண்ணிற்கு பிரச்சனை என கூறி வந்தால் அது என்ன பிரச்சனை என்று கேட்காமல் அதை விட்டுவிட்டு, இந்த மாதிரியான தேவையில்லாத வாக்குவாதம் நடந்த்துவது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :