வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (19:31 IST)

சிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவங்க தான் ஹீரோயின்.! அப்போ படம் சூப்பர் ஹிட் தான்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த வருஷம் மிகவும் வெற்றிகரமான வருஷம் என்றே கூறலாம். ஏனென்றால்,அவர் தொட்டதெல்லாம் வெற்றியையே கொடுத்தது. சீமா ராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்து வருகிறார். 
 

 
இந்த நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எஸ்.கே  17-வது திரைப்படதில் நடிக்கவிருக்கிறார்.  பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
 
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலை மாதம் துவங்க இருக்கிறது. இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

 
ராஷ்மிகா மந்தண்ணா தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட பிரபல முன்னணி நாயகி ஆவார். தெலுங்கு திரைப்படமான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து தமிழிலும் பிரபலமானவர். இவர் தற்போது தமிழில் கார்த்தியின் பெயரிடப்படாத 19-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.