அதிமுகவினரிடையே கடுமையான மோதல்; என்ன காரணம்? களோபரமான மீட்டிங்!!!

ADMK
Last Modified சனி, 23 மார்ச் 2019 (12:36 IST)
தென்காசியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுகவினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
 
தென்காசியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பின்னர் அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தொண்டர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் சண்டை போட்ட கோஷ்டியினரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த இடமே களோபரமானது.


இதில் மேலும் படிக்கவும் :