வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:19 IST)

மணிரத்னத்தின் சோழர்கள் யுனிவர்ஸ் ஆரம்பமா? – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

Mani Universe
பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் சோழர்கள் யுனிவர்ஸை தொடங்குவது குறித்து ரசிகர்கள் செய்து வரும் ட்ரெண்டிங் பேசு பொருளாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனின் கதையை தழுவிய இந்த படத்தை காண பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் 200 கோடி வசூல் செய்துள்ள நிலையில் 1000 கோடி க்ளப்பில் பொன்னியின் செல்வன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து தனித்தனியாகவே படம் எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது என்பதால் தனித்தனி படம் எடுக்க வேண்டும் எனவும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


இதனால் விக்ரம் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் லோகி யுனிவர்ஸை தொடங்கியது போல மணிரத்னமும் பொன்னியின் செல்வன் யுனிவர்ஸ் தொடங்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனைகள் சோசியல் மீடியாவில் களைக்கட்டியுள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் முதல் இரண்டு பாகங்களுக்கு பிறகு, ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர் உள்ளிட்டோருக்கு தனிப்படம் எடுக்கலாம் என்றும், சோழர்களின் பொற்காலம் குறித்து படம் எடுக்கலாம் என்றும் ஃபேன் மேட் போஸ்டர்களை வைரல் செய்து வருகின்றனர்.

Edited By: Prasanth.K