வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:08 IST)

பொன்னியின் செல்வன் படத்தின் திரைக்கதையில் பங்காற்றிய பிரபல நடிகர்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜி ஆர் மற்றும் கமல் முயன்று அது நிறைவடையாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியுள்ளார். அவரும் ஏற்கனவே ஒருமுறை தொடங்கி ஆனால் அதை முடிக்காமல் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலை முதல் முறையாக படமாக்க விருப்பப்பட்டவர் எம்ஜிஅர். தன்னுடைய தயாரிப்பில் இந்த படத்தை தானே இயக்கி இரட்டை வேடத்தில் நடிக்கவும் ஆசைப்பட்டார். அத்ற்கான அறிவெப்பெல்லாம் வெளியாகி போஸ்டர் கூட வெளியிடப்பட்டது. ஆனால் படம் தொடங்கவில்லை. அப்போது இந்த நாவலுக்கு இயக்குனர் மகேந்திரன் திரைக்கதை எழுதினார்.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைக்கதையை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனோடு இணைந்து நடிகர் குமரவேலும் எழுதியுள்ளார். இவர் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இவர் பல முறை மேடை நாடகமாக இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.