வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (11:41 IST)

ஆதித்த கரிகாலனாக ரோகித் சர்மா.. அருள்மொழியாக விராட் கோலி! – வைரலாகும் இந்தியன் செல்வன்!

Indian Selvans
பொன்னியின் செல்வன் போஸ்டரில் இந்திய கிரிக்கெட் வீரர்களை வைத்து செய்துள்ள கிராபிக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனின் கதையை தழுவிய இந்த படத்தை காண பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த படம் குறித்த மீம்கள், போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக கிரிக்கெட் செய்திகளை வழங்கும் ட்விட்டர் பக்கம் ஒன்றில் பொன்னியின் செல்வனின் போஸ்டரில் இந்திய வீரர்கள் முகத்தை கிராபிக்ஸ் செய்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஆதித்த கரிகாலனாக ரோகித் சர்மாவும், அருள்மொழியாக விராட் கோலியும், வந்தியத்தேவனாக சூர்யகுமார் யாதவ்வும் உள்ளனர். அதில் “இந்தியன் செல்வன்ஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை பொன்னியின் செல்வனை தயாரித்த லைகா நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.