வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:18 IST)

பாகுபலி, பொன்னியின் செல்வன் வரிசையில் உருவாகிறதா வேள்பாரி?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து வேள்பாரி திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அதில் கதாநாயகனாக கே ஜி எஃப் படப்புகழ் யாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் சமீபத்தைய ட்ரண்ட்டான பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போல 2 பாகங்களாக உருவாக உள்ளதாம்.