செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (18:18 IST)

’செல்ஃபி’ பட டிரைலர் பாராட்டிய பிரபல இயக்குநர் !

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி பட டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் இயக்குநர் செல்வராகவன் இதைப் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக  இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தற்போது செல்ஃபி என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன்  இணைந்து வர்ஷா பொல்லாமா  மற்றும் கெளதம் மேனன் ஆகியோர்  நடித்துள்ளார்.

இப்படத்தை மதிமாரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை  சபரீச் என்பவர் தயாரிக்க கலைப்புலி எஸ்.தானு வெளியிடுகிறார்.

செல்ஃபி படத்தின் டிரைலர் இன்று  மாலை  4;40 க்கு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் இயக்குநர் செல்வராகவன் ’சூப்பர்’ எனப் பாராட்டியுள்ளார். மேலும், இந்த டிரைலர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.