1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (17:25 IST)

விஜய் சேதிபதி படத்தின் மீது புகாரளித்த இளையராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் மீது இளையராஜா புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி.

இப்படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைத்திருந்த நிலையில்,  கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டிரைலர் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநருக்கும் இளையராஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்த நிலையில், கடைசி விவசாயி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் 2 வது டிரைலர் வெளியான நிலையில் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் என வந்துள்ளது. எனவே தன் அனுமதி இல்லாமல் இசையமைப்பாளரை மாற்றியுள்ளதாக கடைசி விவசாயி படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகாரளித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.