செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (17:35 IST)

நீட்ட எல்லாம் தடுக்க முடியாது… அத வெச்சு நாம எப்படி காச சம்பாதிக்கனும்னுதான் யோசிக்கனும்- கவனம் ஈர்க்கும் செல்ஃபி டிரைலர்!

ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் மதிமாறன் இயக்கியுள்ள செல்பி படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை வெற்றிமாறனின் இணை இயக்குனரும் அசுரன் படத்தின் திரைக்கதை எழுத்தாளருமான மதிமாறன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சற்று நேரத்துக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. நீட் தேர்வுக்குப் பின்னர் கல்லூரிகளில் எப்படி கல்வி வியாபாரப் பொருளாக மாறியுள்ளது என்பதை தோலுரித்துக் காட்டும் விதமாக இந்த படம் உருவாகி இருப்பதை டிரைலர் வெளிப்படுத்துகிறது. கௌதம் மேனன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் கவனிக்கத்தக்க படைப்பாக இருக்குமென்று நம்பும் விதமாக டிரைலர் அமைந்துள்ளது.