திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (10:46 IST)

நான் சீமானை சந்தித்து பேசவே இல்ல.. பொய் பரப்பாதீங்க! – அயலான் இயக்குனர் கண்டனம்!

சீமானை தான் சந்தித்து அலட்சியப்படுத்தியதாக பிரபல யூட்யூப் சேனல் பேசியதற்கு இயக்குனர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழில் நேற்று இன்று நாளை என்ற டைம் ட்ராவல் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் சீமானை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவரை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்ததாகவும் பிரபல சினிமா யூட்யூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் ரவிக்குமார் “நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும் “நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.