செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (23:50 IST)

பணத்தை திருடிய முன்னணி நடிகை…

சினிமாவில் முன்னணி  நடிகை ரூபா தத்தா  பணத்தை திருடி சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத் திரை  நடிகையாக வலம் வருபவர் ரூபா தத்தா.  இவர் மேற்கு வங் மா நிலத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் திருடியதற்காகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இப்புத்தக விழாவிற்கு வந்த நடிகை ரூபா தத்தா, அங்குள்ள குப்பைத் தொட்டிலில் மணி பர்ஸை வீசியுள்ளார்.  இதனால் சந்தேகம் அடைந்த, அவர்கள் ரூபாவிடம் விசாரித்தனர். அப்போது, அவர் தான் பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச சம்பவம் சினிமாத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.