ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் நாளை ரிலீஸ்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் சமீபத்தில் தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்குவருவதாகக் கூறி நடிகர் தனுஷை பிரிந்தார்.
3 படத்திற்குப் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, ''பயணி ''என்ற ஆன்மீக ஆல்பம் ஒன்றில் தீவிர ஈடுபட்டிருந்த ஐஸ்வர்யா இப்பாடலை நாளை வெளியிடுகிறார்.
இதற்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். இதில், அனிருத்( தமிழ்) , கோவிந்த் ( மலையாளம்) , சாகர் ( தெலுங்கு ), இந்தியில் அன் கித் திவாரி பாடியுள்ளனர்.
இந்த ''பயணி'' ஆல்பம் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாவதாக ஐஸ்வர்யா இன்றூ தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.