1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (09:46 IST)

வலைப்பேச்சு வீடியோவுக்கு இயக்குனர் ரவிகுமார் மறுப்பு!

வலைப்பேச்சு வீடியோவில் சொல்லப்பட்ட கருத்து ஒன்றுக்கு நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்
 
நேற்று வலைப்பேச்சு வீடியோவில் இயக்குனர் ரவிக்குமார் சந்தித்தபோது சீமானிடம் அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் வளர்ந்து வரும் இயக்குனர் ஒருவர் ஒரு அரசியல் தலைவரிடம் இப்படி நடந்து கொள்வது மரியாதைக்குரியது அல்ல என்றும் தெரிவித்திருந்தனர் 
 
இந்த வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்து இயக்குனர் ரவிக்குமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல.