1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (00:32 IST)

விஜய் வைத்துள்ள ஆயுதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். தனுஷ்

இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' ஆடியோ விழாவில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தனுஷ்



 
 
தனுஷ் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது உலகம் அறிந்ததே. விஜய் குறித்து அவர் அவ்வப்போது தனது டுவிட்டரில் கூறி வருவதும் உண்டு.\
 
இந்த நிலையில் மெர்சல் ஆடியோ விழாவில் தனுஷ் பேசியதாவது: தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது ஆண்டாகவும் அமைத்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன்.
 
விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.
 
ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
 
இவ்வாறு தனுஷ் பேசினார்.