மெர்சல் இசை வெளியீட்டுக்கு பிரமாண்டமாக உருவாகியுள்ள மேடை


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (17:56 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அதற்காக பிரமாண்டமான மேடை தயாராகியுள்ளது.

 

 
அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படமாக இருப்பது மெர்சல். மெர்சல் படத்தில் ப்ர்ஸ்ட் லுக் மற்றிம் சிங்கள் டிரால் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக டுவிட்டரில் எமோஜி மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று மாலை பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது.
 
இசை வெளியீடு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. நேரு விளையாட்டரங்கில் பிரம்மாண்ட மேடைகள் தயாராகி வருகின்றன. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இன்னிசை கச்சேரி நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :