செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (22:34 IST)

விமர்சனம் பண்றவங்களை மறந்துருங்க: விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கடைசியில் பேசிய  விஜய் சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறினார். அதில் ஒன்று 'நம்மை பற்றி நெகட்டிவ்வாக விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம். அவர்களை மறந்துவிடுங்கள் என்றார்.



 
 
எல்லோருக்குமே நம்மை பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும். ஒருசிலராவது நமக்கு எதிர்ப்பாக இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்லும் என்று விஜய் கூறினார். என்னை பற்றி நெகட்டிவ்வாக விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் நான் இந்த உயரத்தை அடைந்துள்ளேன். 
 
நம்மை இந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக வாழவிட மாட்டார்கள், அதையெல்லாம் தாண்டிதான், மோதி முண்டியத்துதான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். சமூக வலைத்தளங்களில் அதிகம் நெகட்டிவ்வாகவும், பாசிட்டிவ்வாகவும் விமர்சனம் செய்யப்பட்ட விஜய் இந்த கருத்தை கூறியது மிகப்பொருத்தமாக இருந்தது.