தலைவி படத்திற்கு தடை கேட்க தீபாவிற்கு உரிமையில்லை - ஏ.எல்.விஜய்
தலைவி படத்திற்கு தடை விதிக்கக் கோரிக் கேட்ட தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கப் பல இயக்குநர்கள் போட்டி போட்டுள்ளனர்.
இதில், கௌதம் மேனன், நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் ஜெயலலிதாவ் வின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக குயின் என்ற வெப் தொடரை இயக்கினார் இது வெற்றி பெற்றது.
தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு தடைகோரி ஜெயலலிதாவின் வாரிசாக நியமிக்கப்பட்டுள்ள தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இயக்குநர்கள் ஏ.எல்.விஜ மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோர் சார்பில் ஆஜரன வழக்கறிஞர் இப்படம் தலைவி என்ற புத்தகத்தில் அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும் இதற்கு தீபாவின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்று கூறினார்.
மேலும், ஜெயலலிதாவைப் பற்றி நல்லமுறையில் இப்படத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் இதில் தடை கேட்ட தீபாவுக்கு உரிமையில்லை என்று கூறப்பட்டுள்ளது.