செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:09 IST)

சசிக்கலாவுக்கு கார் ஓட்டிவந்த ஜெயலலிதாவின் விசுவாச டிரைவர்! – சுவாரஸ்ய தகவல்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிக்கலா 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

பெங்களூரில் தொடங்கிய பயணம் 23 மணி நேரம் தொடர்ந்த நிலையில் இடையிடையே கார்கள் மாறியும் சசிக்கலா பயணித்தார். சசிக்கலாவுக்காக காரை டிரைவர் பிரபு என்பவர் ஓட்டி வந்தார். இந்த பிரபு கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது