செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (13:41 IST)

அமெரிக்காவில் புதுப்பொலிவுடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்!

அமெரிக்காவிற்கு மீண்டும் சிகிச்சைக்காக சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அங்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

 

 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்திற்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின. அதை தொடர்ந்து இடைநிலை பள்ளி ஆசிாியா்களை விஜய பிரபாகரன் நேற்று சந்தித்து பேசினார். 

 
2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே கம்பீரத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் களப்பணி ஆற்றுவார் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் நண்பர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கிறிஸ்துமஸ் விழாவை அமெரிக்காவில் நண்பர்களோடு கொண்டாடிய போது எடுத்தப் படங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் ட்வீட் செய்துள்ள இந்த புகைப்படங்கள், தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.