திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 டிசம்பர் 2018 (10:17 IST)

அதிபராக பதவியேற்று டிரம்ப் அதை இத்தனை முறை செய்தாராம்..?

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்று ஒருநாளைக்கு சராசரியாக 10 குற்றச்சாட்டுகள் என மொத்தம் 7546 தவறாக குற்றச்சாட்டுகளை அல்லது பொய்களை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதுகுறித்து அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு, டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் தற்போது வரை, நாள் ஒன்றுக்கு 10.78 தவறான தகவல்கள் அல்லது பொய்கள் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடந்த நேரத்தில், அக்டோபர் மாதம் 1,205 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். முதல் 8 மாதத்தில் 1,137 குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறார்.  
 
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதியுடன், டிரம்ப் அதிபராக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்தது. இதுவரை 7,546 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.