திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:46 IST)

ரஜினி இன்று அமெரிக்கா பயணம் ! ஏன் தெரியுமா...?

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12 ஆம் தேதி  வந்தது. அதற்கு ஏராளமானோர்  அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று அனைத்து ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியானது. அதில் ரஜினி புது டிவிசேனல் துவங்கப்போவதாகவும், அதற்கு மூன்று பெயர்களை அவர் பரிசீலித்து உள்ளதாகவும், இந்த சேனலுக்கு ரங்கராஜ் பாண்டே தான் ஆசிரியராக இருக்கப் போகிறார் என்று செய்திகள் தெரிவித்தன. ஆனால் ரஜினியின் தரப்பிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. 
பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் சமீபத்தில் முடிந்து விட்டதால் , இன்று மாலை தனது குடும்பத்தினருடன் ரஜினி அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் 10 நாட்கள்  தங்கி ஒய்வில் இருப்பார் எனவும் தெரிகிறது.
 
ரஜினி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறாகள். 
 
ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தி ஒரு வருடம் ஆன பிறகும் அதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.