வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:47 IST)

புத்தாண்டை கொண்டாட அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி..!

ரஜினிகாந்த் 2019 ஆண்டு புத்தாண்டை அமெரிக்காவில்  கொண்டாடஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து முடித்து, ரிலீஸுக்குக் காத்துக் கொண்டிருக்கிறார். முன்பு எப்போதையும் விட இந்த வருடம் ரஜினிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அதாவது 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருந்த 'காலா' திரைப்படம் வெளியானது. 
 
தொடர்ந்து இவ்வருடம் நவம்பரில் இயக்குநர் ஷங்கர் - ரஜினி கூட்டணியில் உருவான 2.0 வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜின் 'பேட்ட' பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
 
இந்நிலையில், தொடர் படப்பிடிப்புகளில் இருந்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்தினருடன் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார். ஓய்வெடுத்த பின்னர் ஜனவரி முதல் வாரத்தின் இறுதியில் சென்னை திரும்புவதாக தெரிகிறது.