செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஜூலை 2019 (15:27 IST)

வலைதளங்களில் மீண்டும் உலாவரும் சுச்சி லீக்ஸ்; வெளியான திரிஷா நயன்தாரா புகைப்படங்கள்

கடந்த 2017-ஆம் ஆண்டு கோலிவுட் திரையுலகினர்களின் முகத்திரையை கிழித்து வந்த பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது என்பதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. 
சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் வெளியானது. பிறகு இவை சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் கைவரிசை இது  என்று கூறப்பட்டது. தற்போது சுச்சி லீக்ஸ் விவகாரம் மீண்டும் வலைதளங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதில் தற்போது திரிஷா மற்றும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று லீக்காகி வேகமாக பரவிவருகிறது.
 
தமிழ் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்த சுசி லீக்ஸ் ஓய்ந்து விட்டாலும், ட்விட்டரில் இதே பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு ஒன்று  செயல்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று வெளியானதை தொடர்ந்து,  தற்போது இரவு நேர பார்ட்டியில், பிரபல நடிகைகளான திரிஷா, நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே சுச்சி லீக்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது me too-வின் மூலம் சினிமா பிரபலங்களை பற்றிய  செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மறுபடியும் சுச்சி லீக்ஸா என திரையுலகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.