செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (09:00 IST)

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் நயன்தாரா – நிவின் பாலி வெளியிட்ட போஸ்டர் !

தனது தாய்மொழியான மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப்படம் ஓணம் திருவிழாவின்போது திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.