சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320
சர்வதேச சந்தை நிலவரங்களால், சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனையான நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து விற்கப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்:
ஒரு சவரன் : ரூ.96,320
ஒரு கிராம்: ரூ.12,040
மேலும், வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து, இன்று ரூ.199க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில நாள்களாகத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
Edited by Mahendran