ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2019 (14:10 IST)

"நல்லா கால் தூக்கு" - உனக்கெல்லாம் நயன்தாரா - பங்கமா கலாய் வாங்கிய விக்னேஷ் சிவன் - வீடியோ!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. அந்த போட்டோக்கள் அதிக அளவில் வைரலாகும். 
 
தற்போது விக்னேஷ் சிவனின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்ஸ்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக புது விதமான உயிருக்கு ஆபத்து விளைவிக்காத விதத்தில் "பாட்டில் கேப் சேலஞ்" என்ற கேம் தற்போது இணையத்தில் மெகா ட்ரெண்டாகி வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் காலால் பாட்டில் மூடியை திறந்து அதை வீடியோ எடுத்து வெளியிடவேண்டும்.
 
சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார் , தமிழ் நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோர் இந்த சேலஞ்சை ஏற்று அவர்களது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாக்கினர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இந்த கேம் விளையாட காலால் பாட்டிலின் மூடியை  திறக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் காலை மேலே தூக்க முடியாமல் திணறி பின்னர் அதை தன் கையாலேயே திறக்கிறார்.
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் "எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை? உனக்கெல்லாம் நயன்தாரா கெடச்சிருக்காங்க பாரு அவங்கள சொல்லணும்" என்று கடுப்பாகியுள்ளனர். ஒரு சிலரோ  "கால் நல்லா தூக்கி அடிக்க ப்ரோ" என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#bottlecapchallenge ..