அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான நயன்தாராவின்’ காதலர் ’!

VIGNESH SIVAN
Last Updated: ஞாயிறு, 30 ஜூன் 2019 (11:49 IST)
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் என்பது உலகுக்கே தெரியும்.இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.
இதனால் சூர்யாவின் மார்கெட் டல் அடித்ததுடன், விக்னேஷ்சிவனுகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவுடன்  விக்னேஷ் சிவன் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது.ஆனால் தான் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகத்தான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த அனுபவத்தால் புதுப்படத்திற்கு அருமையாக ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  தன்னுடைய அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்துள்ளதையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்சமயம் இப்படத்திற்கு SK17 என்று பெயரிட்டுள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :