பிரச்னையில் இருந்து மீண்டு பெருமூச்சுவிட்ட நயன்தாரா - கூடியவிரைவில் தரமான சம்பவம்!

Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (18:22 IST)
தமிழ் திரையுலகில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நயன்தாராவின் கொலையுதிர் காலம்  படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது

 
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள  இந்த படம் ரிலீஸ் ஆவதில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. 
 
கடந்த மாதமே வெளிவருவதாக இருந்த  கொலையுதிர் காலம்  தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது படத்திற்கு தடைவிதித்த நீதிமன்றமே  தடையை நீக்கி ரிலீசிற்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சமீபகாலமாகவே ஐரா, மிஸ்டர் லோக்கல் என தொடர் தோல்வி படங்களை சந்தித்துவந்த  நயன்தாரா கொலையுதிர் காலம் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் இதுவும் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள மனம் துவண்டு விட்டார். 

 
இந்நிலையில் தற்போது படத்திற்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதால் நயன் தவறவிட்ட மார்க்கெட்டை மீதும் எட்டிப்பிடிக்க வம்பாடுபட்டு வருகிறார் எனவே இப்படம் அவருக்கு ஒரு நல்ல கம் பேக்கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :