விரைவில் தொடங்குகிறது அறம் 2 – கதாநாயகி யார் ?

Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (11:51 IST)
2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகச்சிறப்பான வெற்றி பெற்ற அறம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபிநயினார் இயக்கிய முதல் படமான 'அறம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உடனடியாக இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது எனப் படக்குழு அறிவித்தது.
 
ஆனால் நயன்தாரா ஒத்துக்கொண்டு இருந்த சிலப் படங்களால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை உருவானது. அதனால் அதற்கிடையே கோபி நயினார் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதியப்படம் ஒன்றை இயக்க ஆரம்பித்துள்ளார். இப்போது அந்தப்படமும் சிலபல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 
இதையடுத்து அறம் 2 கதையை முடித்த இயக்குனர் கோபி நயினார் இந்தக்கதையை சமந்தாவுக்கு கூறியுள்ளார். ஆனால் அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் நடிக்க முடியாத சூழல் உருவாக வேறு சில கதாநாயகிகளிடமும் இந்தக்கதையை சொல்லி வருவதாகத் தெரிகிறது. கதாநாயகி யார் என்பது முடிவானப் பின்னர் படப்பிடிப்புத் தொடங்கும் எனத் தெரிகிறது.

 இதில் மேலும் படிக்கவும் :