புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (21:17 IST)

ஆர்யாவின் ‘மகாமுனி’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

ஆர்யா நடிப்பில் ‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மகாமுனி’. இந்த திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது தூசி தட்டி வெளியாக இருக்கிறது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்றும் ஆர்யாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது 
 
 
இந்த நிலையில் ‘மகாமுனி’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘மகாமுனி’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 157 ரன்கள் என்ற அளவில் உள்ளது. அதாவது இரண்டு மணி நேரம் 37 நிமிடங்கள் என்ற சராசரி நீளத்தை இந்த படம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார்  பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
 
ஆர்யா ஜோடியாக இந்துஜா நடித்துள்ள இந்த படத்தில் மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது