ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:19 IST)

ஆர்யாவின் அடுத்த திருப்புமுனை "மகாமுனி" - வெற்றியை உறுதி செய்த மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமாவில் விசித்திரமான கதைகளை தைரியமாக தேர்ந்தெடுத்து அதற்காக 100% உழைப்பை போட்டு ஒட்டுமொத்த சினிமா உலகையே படத்தின் வெற்றியை திரும்பி பார்க்க செய்பவர் நடிகர் ஆர்யா. அந்த வரிசையில் அவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நான் கடவுள், அவன் இவன் வரிசையில் தற்போது "மகாமுனி" இணைந்துள்ளது. 


 
‘மௌன குரு’ இயக்குனர் சாந்தகுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் இயக்கியுள்ள ‘மகாமுனி’ இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  தமன் இசையமைக்கும் இப்படத்தில் ஆர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா நடித்துள்ளனர்.  எஸ்.எஸ்  தமன் இசையமைத்துள்ள இப்படத்தில்  ஜுனியர் பாலையா, ஜெய ப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 
 
மகாமுனி படம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் உள்ளிட்டவை  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் சமீபத்தில் தான் இப்படம் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் ஆர்யாவின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் வெளியாகி பல விருதுகளை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை.