புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:57 IST)

செப்டம்பரில் ஆர்யாவின் இரண்டு படங்கள் ரிலீஸ்!

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவரான ஆர்யா கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு 'ராஜா ராணி', ஆரம்பம்' ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஆர்யா அதன் பின் வெளிவந்த அவருடைய எந்த படமும் பெரிய லாபத்தைத் தரவில்லை. கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த கஜினிகாந்த் கூட வசூலில் சுமாராகவே இருந்தது 
 
இந்த நிலையில் ஆர்யா பெரிதும் நம்பியிருக்கும் திரைப்படம் சூர்யாவுடன் நடித்த 'காப்பான்' திரைப்படம் தான். இந்த படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும், இந்தப் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ஆர்யா நடித்த இன்னொரு திரைப்படமான 'மகாமுனி' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்யா நடித்த இரண்டு படங்கள் செப்டம்பரில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயபிரகாஷ், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாந்தகுமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த 'மெளனகுரு' என்ற திகில் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.