16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?
திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் நடிகர் அமீர் கான் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவித்த தாதா சாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்று படத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கதை திருப்தி அளிக்காததால், இருவரும் தற்போது தங்களுடைய கவனத்தை பிரபலமான படமான '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது திருப்பியுள்ளனர்.
'3 இடியட்ஸ் 2' படத்தின் கதையை ராஜ்குமார் ஹிரானி இறுதி செய்துவிட்டதாகவும், இதில் அமீர் கான், கரீனா கபூர், மாதவன், ஷர்மன் ஜோஷி உள்ளிட்ட நான்கு முக்கிய நடிகர்களும் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தின் கிளைமாக்ஸுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து நடப்பதாக இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகத்தின் கதை, முதல் பாகத்தைப் போலவே வேடிக்கையாகவும், உணர்வுபூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று படக்குழு நம்புவதாக கூறப்படுகிறது.
மேலும், ஹிரானி தனது பிரபல படமான 'முன்னா பாய்' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதையிலும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
Edited by Siva