அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள் – அஜித் 60 அப்டேட் !

Last Modified வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:34 IST)
அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் அஜித் 60 படத்தில் அவருடன் ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார்.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகள் இப்போது நடந்துவருகின்றன.
 
இதையடுத்து இதே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடனேயே அஜித் அடுத்த படத்திலும் பணிபுரிகிறார். அந்த படத்துக்கான பூஜைகள் இம்மாத இறுதியில் நடக்க இருக்கிறது. இப்போது அஜித் 60 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :