1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Ajith started 'Vivegam' Dubbing

‘விவேகம்’ டப்பிங்கைத் தொடங்கினார் அஜித்

விவேகம் படம்
‘விவேகம்’ படத்துக்கான டப்பிங்கை, இன்று தொடங்கியுள்ளார் அஜித் என்கிறார்கள்.

 
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில், காஜல் அகர்வால் அஜித்துக்கு  ஜோடியாக நடிக்கிறார். விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.
 
பல்கேரியாவில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னை திரும்பியது படக்குழு. ஆனால், பேட்ச் ஒர்க் மட்டும் மீதமிருப்பதாகவும், அதை சென்னையிலேயே எடுத்துவிடலாம் என்றும் கூறப்பட்டது. அந்தக்  காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்களாம். இந்த நிலையில், தன்னுடைய டப்பிங்கை இன்று தொடங்கியிருக்கிறார் அஜித்.
About Writer
Cauveri Manickam (Sasi)
அடுத்த கட்டுரையில்
நம்பர் நடிகைக்கு இப்படியொரு மவுசா?