1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Numbar Actress Like this Mass?

நம்பர் நடிகைக்கு இப்படியொரு மவுசா?

நம்பர் நடிகை
பெரிய நம்பர் நடிகைக்கு இவ்வளவு மவுசா என கோடம்பாக்கமே ஆச்சரியத்தில் திளைக்கிறது.

 
13 வருடங்களாக, ஹீரோயினாகவே நிலைத்து நிற்கிறார் பெரிய நம்பர் நடிகை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள  கேரக்டர்களாக தேடித்தேடி நடிக்கிறார். அப்படி அவர் நடித்து சமீபத்தில் வெளியான கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயரைக்  கொண்ட படம், வசூலில் கோட்டைவிட்டது. இதனால், அவர் நடித்து ரிலீஸுக்கு காத்திருக்கும் அடுத்த இரண்டு படங்களும்,  எதிர்பார்த்த அளவுக்கு பிசினஸ் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
 
இந்நிலையில், வரலாற்றுப் படத்தில் இருந்து உலக நாயகனின் மூத்த மகள் விலகிவிட்டார் அல்லவா? அந்த கேரக்டரில் பெரிய நம்பர் நடிகைதான் நடிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன. அந்தப் படத்துடன், பெரிய நம்பர் நடிகையின் பெயரையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஹேஷ் டேக், ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து விட்டது. படம் ஃபெயிலியர்  ஆனாலும், நடிகைக்கு இன்னும் மவுசு குறையவில்லை.
About Writer
Cauveri Manickam (Sasi)
அடுத்த கட்டுரையில்
ஏ.ஆர்.முருகதாஸ்- மகேஷ்பாபு கூட்டணியில் ஸ்பைடர் பட டீசர் வெளியீடு!!