1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (19:59 IST)

மச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...

விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நமீதா. பிறகு சரத்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என கூறி கிறங்கடித்த நமீதா கவர்ச்சிக்கு எப்போதும் பஞ்சம் காட்டியதில்லை.
 

குண்டு உடம்பழகி நமீதா பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்று மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களின் மனதில் கூண்டிட்டு அமர்ந்தார். பாத்ரூமை இப்படித்தான் கழுவவேண்டும் என்ற பாடத்தை புகட்டி தமிழ் ரசிகர்களின் கவர்ந்தார். பிறகு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நமீதா காதலரும் தயாரிப்பாளருமான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆனபோதிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வரும் நமீதா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.  சிலர் கிம் கர்தாஷியனை விட நீங்கதான் அழகு எனவும் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.