காதலரை திருமணம் செய்யவிருக்கும் பிக்பாஸ் பிரபலம்

Last Updated: சனி, 29 செப்டம்பர் 2018 (15:23 IST)
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபலம் சுஜா வருணி. அவருக்கு வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. 
நடிகை சுஜா வருணி பிக்பாஸ் முதல் சீசனில் வைல் கார்டு எண்ட்ரி கொடுத்தவர். 2002-ல் பல படங்களில் நடித்து வந்தாலும், முன்னணி நடிகையாக அங்கீகாரம் இல்லாததால், அதற்காக பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.
 
இந்நிலையில் சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் எனவும், அவர்கள் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாகவும்,  செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து நீண்ட நாள் காதலரான நடிகர் சிவகுமாரை நவம்பர் 19ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய சிவாஜிதேவ்வும் கடந்த 11 வருடங்களாக காதலித்து  வருகின்றனர். அவர் சிவாஜிதேவ் என்ற பெயரை மாற்றி சிவக்குமார் என படங்களில் நடித்துவருகிறார். 
 
இருவரும் திருப்பதியில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் நிச்சயதார்த்த மோதிரத்தையும் சுஜாவுக்கு அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :