1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (17:03 IST)

சூப்பர் ஸ்டார் படத்தில் சிறப்புதோற்றத்தில் நடிக்கும் விஜய் ?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் அட்லி.இவர் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து ,  தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அட்லி – ஷாருக்கான் படத்தில்  நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
sharukhan

அத்துடன்,  நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.