சுவை தரும் கேரட் டேட்ஸ் கீர் செய்ய !!

Carrot Dates Kheer
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கேரட் துண்டுகள் - முக்கால் கப்
பேரீச்சம்பழம் - 6
பாதாம் - 10
முந்திரி - 5
உலர் திராட்சை - 10
தேங்காய் பால் - 2 டம்ளர்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
பிரவுன் சுகர் - தேவையான அளவு

செய்முறை:
 
பாதாம் பருப்புகளை நன்கு கழுவி, 5 மணி நேரத்துக்கு ஊறவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். அதுபோல முந்திரி, உலர்திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரில் 3 மணி நேரத்துக்கு ஊறவிடவும். அறிந்த கேரட் துண்டுகளை கால் கப் தண்ணீரில் வேக விடவும்.
 
அடுப்பில் அடிபிடிக்காத பாத்திரத்தை வைத்து, ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் ஊற்றி, 2 நிமிடங்கள் சூடேற்றி, அதில் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். குறைவான தீயிலே வைத்து 2 நிமிடங்கள் வரை தேங்காய்ப் பாலை கலக்கவும்.
 
மிக்ஸியில் வேகவைத்த கேரட்டும் மீதமிருக்கும் தண்ணீரும் சேர்த்து, அதனுடன் ஊறவைத்த பாதாம், முந்திரி, உலர்திராட்சை, பேரீச்சை சேர்த்து ஸ்மூத்தி போல திக்கான பதத்துக்கு அரைக்கவும்.
 
பானில் உள்ள தேங்காய்ப் பாலில், அரைத்த கேரட் மற்றும் டேட்ஸ் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். மேலும், இதில் ஒரு டம்ளர் தேங்காய்ப் பாலும் சேர்த்து, அதனுடன் ஏலப்பொடியும் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். மிதமான சூட்டில் குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :