திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான குலாப் ஜாமுன் செய்ய...!!

தேவையான பொருட்கள்: 
 
சக்கரை - 1/2 கப் 
ஏலக்காய் - 4 
பால் பவுடர் - 1 கப் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/4 டேபிள் ஸ்பூன் 
பால் - 5 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் நாம் குலாப் ஜாமிற்கு உண்டான சக்கரை பாகினை தயார் செய்து கொள்வோம். சக்கரை பாகினை செய்ய நாம் ஒரு கடாயில் சக்கரை போட்டு அதே  அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து 8 முதல் 10 நிமிடம் வடை மிதமான சூட்டில் வைக்கவும். 
 
பிறகு அதனுடன் ஏலக்காயினை தட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். இப்போது சக்கரை பாகு தயார். இப்பொது குலாப் ஜாமுன் செய்ய துவங்கலாம். அதற்கு  முதலில் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் கொட்டி அதனுடன் நெய் சேர்த்து மேலும் மைதா மாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதில் பால்  கலந்து பிசைந்து கொள்ளவும். 
 
பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் போட்டு நன்றாக செவரும் வரை  பொரித்து எடுத்து 4 முதல் 5 மணிநேரம் வரை நாம் ஏற்கனவே தயார் செய்த சக்கரை பாகில் ஊற வைக்கவேண்டும். இப்போது சுவையான குலாப் ஜாமுன் தயார்.