1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் தட்டை செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 200கிராம்
பொட்டுக்கடலை - 50கிராம்
கடலை பருப்பு - 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
வெண்ணெய் - 2டீஸ்பூன்
எள் - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய், ஊற வைத்த கடலைப்பருப்பு இவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறிக் கொள்ள வேண்டும். காய்ந்த  மிளகாய், மிளகு,பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை கரகரப்பாக அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும். 
 
சிறிது, சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழையிலை அல்லது பிளாஸ்டிக்  ஷீட்டில் தட்டைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். சுவையான மொறுமொறுப்பான தட்டை தயார். 
 
குறிப்பு: தட்டைக்கு மாவு பிசையும் போது, கைகளில் நன்றாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு வாழையிலையில் தட்டி எடுத்தால், கைகளில் ஒட்டாமல் வரும்.